Latest News
ரூ.3.50 கோடி சம்பளம் - 'போர் அடிக்குது' என வேலையை ராஜினாமா செய்த இளைஞர்!சென்னையில் மியாவாக்கி காடுகள்!பா.ஜ.க. நிர்வாகி கொலை - 4 பேரை கைது செய்தது தனிப்படைஒடிசாவில் வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்கள்பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!கல்குவாரி விபத்தில் மீட்பு பணி தாமதத்திற்கு என்ன காரணம்... ஓய்வு பெற்ற சிஐஎஸ்எஃப் வீரர் விளக்கம்புதுடெல்லி: தொலைத்தொடர்பு துறையின் ஒழுங்குமுறை ஆணையமான டிராய்யின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். விழாவில் அஞ்சல்தலை ஒன்றை மோடி வெளியிட்டார். சென்னை ஐ.ஐ.டி. தலைமையில் 8 கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய 5-ஜி சோதனை கருவியை வெளியிட்டார். 21-ம் நூற்றாண்டில் நாட்டின் முன்னேற்றத்தை தொலைத்தொடர்பு தீர்மானிக்கும். 5-ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அடுத்த 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 450 பில்லியன் (ரூ.34 லட்சம் கோடி) அமெரிக்க டாலர்களாக உயர்த்தும். நாட்டுக்கு சொந்தமான 5ஜி தர நிலைய 5ஜி வடிவில் உருவாக்கியுள்ளது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். கிராமங்களுக்கு 5ஜி தொழில் நுட்பத்தை கொண்டு செல்வதில் இது பெரும் பங்கு வகிக்கும். நாம் சுயமாக தயாரித்த 5ஜி தொழில்நுட்பத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் முக்கியமாக மற்றும் நவீன தொழில்நுட்பத்துக்கான தன்னிறைவுக்கான ஒரு முக்கியமான படியாகும். 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் ஆட்சி, வாழ்வின் எளிமை, வணிகம் போன்றவற்றிலும் சாதகமான மாற்றங்களை கொண்டுவர போகிறது. இது விவசாயம் சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை அதிகரிக்கும். இது பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 2ஜி சகாப்தம், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது. 4ஜிக்கு நாடு வெளிப்படையாக இருக்கிறது. தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை இரண்டில் இருந்து 200க்கும் மேல் விரிவடைந்துள்ளது. இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையமாக உள்ளது. ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தால் இந்தியாவில் தொலைத்தொடர்பு டேட்டா கட்டணங்கள் மலிவாக உள்ளது. அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை கொண்டுவர இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பிளாஷ்டிக் அறுவை சிகிச்சையின் போது உயிர் இழந்த பிரபல இளம் நடிகைதஞ்சையில் ஆடிட்டர் சரமாரி வெட்டிக்கொலை: 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சுராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

0

சென்னை:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை அகற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் காலின் கோன்சால்வேஸ் வாதிடும் போது, ‘சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார், அது ஒரு உணர்ச்சிபூர்வமான கொந்தளிப்பை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தற்போது மாநில முதல்வர் மாற்று இடம் வழங்குவதாக கூறியுள்ளார், ஆனால் அந்த இடம் தற்போது வசித்து வரும் பகுதியில் இருந்து வெகுதொலைவில் உள்ளதால், இந்த மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் தற்போது இந்த மக்களுக்கு உடனடி மாற்று இடமோ, அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை என கூறினார்

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் 2011 முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதை மாநில அரசு செயல்படுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் நாங்கள் மாநில அரசின் நடவடிக்கைகளை நிறுத்த போவதில்லை. சம்மந்தப்பட்ட நபர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அரசின் வேலை, அதை அவர்கள் செய்யட்டும்,

இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் நாங்கள் தடை விதிக்க போவதில்லை. மேலும் ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் காலி செய்வதற்கு குறிப்பிட்ட காலம் அவகாசம் வழங்கியிருந்தால் அதை அவர்கள் கடைபிடிக்க வேண்டும். ஒரு உத்தரவை அமல்படுத்துவது அரசின் கடமை, அதை தானே முதல்-அமைச்சர் செய்து வருகிறார்’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மாற்று இடம் இதுவரை வழங்கப்படவில்லை, இது நியாயம் இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதில் அளித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நோட்டீசை பெற்று கொள்ளுங்கள். வேண்டுமெனில் நாங்கள் தற்காலிகமாக மாற்று இடம் வழங்க அறிவுறுத்தல் வழங்குகிறோம். ஆனால் ஆக்கிரமிப்பு விசயங்களில் நீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்பட வேண்டும், அமல்படுத்தப்பட வேண்டும்.

மேலும் தற்போது முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் மாற்று இடம் தொடர்பாக அறிவிப்பை கொடுத்துள்ளார் என கூறுகின்றீர்கள், எனவே அது உறுதிமொழி தானே அவ்வாறு தெரிவித்திருப்பது சாதாரண விசயம் கிடையாது.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தடை விதிக்க போவதில்லை. ஏற்கனவே பல குடும்பம் காலி செய்த பின்னரும் தற்போது இருப்பவர்கள் ஏன் காலி செய்ய மறுக்கின்றனர்? முதல்வர் சட்டமன்றத்தில் கூறியதில் இருந்து அவர் இந்த விவகாரத்தில் விழிப்புணர்வுடன் இருக்கிறார் என தெரிகிறது.

உரிய பாதுகாப்பை பயன்படுத்துங்கள், ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக எங்கள் உத்தரவை அமல்படுத்துங்கள். அதேவேளையில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு இந்த மனுதாரர்களை மாற்றலாம்.

மேலும் அடிப்படை வசதிகளையும் இந்த மக்களுக்கு அரசு செய்து கொடுக்க வேண்டும்.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால மனுக்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடந்த 2011ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடுத்து நிறுத்தும் நோக்கிலானது என்றே கருதுகிறோம்.

எனவே ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம்.

அதேவேளையில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை ஜூலை 12-ந்தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.

அன்றைய தினம் ஆக்கிரமிப்பு அகற்றம், மாற்று இடம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.