Latest News
நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை :மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்மாமல்லபுரம் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி- அமைச்சர்கள் உற்சாக வரவேற்புஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகள் தீவிரமாக கண்காணிப்புமருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்தனுஷ்கோடியில் கடல் சீற்றம்- கடலில் நீராட பக்தர்களுக்கு தடைரூ.3.50 கோடி சம்பளம் - 'போர் அடிக்குது' என வேலையை ராஜினாமா செய்த இளைஞர்!சென்னையில் மியாவாக்கி காடுகள்!பா.ஜ.க. நிர்வாகி கொலை - 4 பேரை கைது செய்தது தனிப்படைஒடிசாவில் வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்கள்பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு: இன்று அல்லது நாளை அறிக்கை தாக்கல்..!

0

விழுப்புரம்:

கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகள் ஆய்வு தொடர்பான அறிக்கையை ஜிப்மர் மருத்துவ குழுவினர் இன்று அல்லது நாளை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி(17)‌, கடந்த மாதம் 13ம் தேதி அங்கு மர்மமான முறையில் இறந்தார். இதை கண்டித்து கடந்த 17ம் தேதி நடந்த போராட்டம் கலவரமானது. இதில் பள்ளி வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டது.

இருப்பினும் மனுததாரர் தரப்பில் மருத்துவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்கப்படவில்லை. இதனை எதிர்த்து மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே மாணவியின் உடல், மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு  மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவரது உடலை பெற்றுக்கொள்ளுமாறு வீட்டில் கடந்த 19ம் தேதி வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் மாணவி உடலை வாங்க பெற்றோர் முன்வராததால், காவல்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்போவதில்லை என்றும் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

உத்தரவின் அடிப்படையில் பிரேத பரிசோதனை முடிவுகள், வீடியோ காட்சிகள் ஜிப்மர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு பெற்றது. இன்று அல்லது நாளை விழுப்புரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.