Breaking News
காண கண் கோடி வேண்டும்: அசத்தும் பாகுபலி 2 டிரெய்லர்!

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் – பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் பாகுபலி 2 படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாகுபலி 2 – தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.