மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் நிதிநிலை அறிக்கை இருக்கும்: டி.ஜெயக்குமார்

0

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

2017-2018 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். இதையொட்டு அவர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நிதிநிலை அறிக்கையை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜெயக்குமார்,

நிதி பற்றாக்குறை இருந்தாலும் மக்களுக்கான நலத்திட்டத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளமாட்டோம். நிதிப் பற்றாக்குறை போன்ற எத்தனை தடைகள் வந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் தொடரும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் நிதிநிலை அறிக்கை இருக்கும். ஜெயலலிதா ஆசியுடன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறேன் என்றார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.