Breaking News
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வடகாட்டில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி வடகாட்டில் நடைபெற்று வந்த போராட்டம் நேற்று தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக மத்திய அரசு கடந்த பிப்.15-ம் தேதி அறிவித்தது. இதை எதிர்த்து நெடுவாசல், கோட்டைக்காடு, நல்லாண்டார் கொல்லையில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.

வடகாட்டில் மார்ச் 5-ம் தேதி போராட்டம் தொடங்கியது. மத்திய அரசு இந்தத் திட்டத்தை ரத்து செய்யாததால் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டமாக மாற்றப்பட்டது. நேற்று நடைபெற்ற போராட்டத்தை ஆதரித்து ஆலங் குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் (திமுக) உள்ளிட்டோர் பேசினர்.

இதைத்தொடர்ந்து, வடகாட் டில் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் ஆட்சியர் சு.கணேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, எரிபொருள் சோதனைக்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூடவேண்டும். எண் ணெய் நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் எந்த அனுமதியும் அளிக்கக்கூடாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்கும் வகையில் தீர்மானம் நிறை வேற்றுவதற்காக சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை கூட்ட உத்தரவிட வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் பெற் றுள்ள தனியார் நிறுவனம், மாவட்ட நிர்வாகத்துக்கு தொகை அளித் திருந்தால் அதை உரிய நிறுவனத் திடமே திருப்பி அளிக்க வேண்டும். அறவழி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்பன உள் ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை ஆட்சியரிடம் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் சு.கணேஷ் உறுதியளித்தார். மேலும், இதற் கான உத்தரவாதத்தை எழுத்துப் பூர்வமாக மார்ச் 27-ம் தேதி தருவதாகவும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் அறி வித்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் சு.கணேஷ், செய்தியாளர்களிடம் கூறியபோது, ”ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி பெறுவதற்காக ரூ.12 லட்சத்தை மாவட்ட நிர்வாகத்துக்கு, ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனம் அனுப்பி வைத் துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி, இந்தத் திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காது என்பதால், அந்தத் தொகை உரிய நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பப்படும். போராட்டக் குழு வினரின் அனைத்து கோரிக்கை களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.