Latest News
விவசாயிகள் பிரச்னையில் மீடியாக்கள் கவனம் செலுத்த வேண்டும் : வெங்கைய நாயுடுசசிகலாவின் பரோல் இன்றுடன் நிறைவு; நாளை மாலை 5 மணிக்குள் சிறைக்குள் செல்ல வேண்டும்தினகரன், புகழேந்தி மீதான தேச துரோக வழக்கில் அக். 24 வரை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவுடெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சைக்காக தினமும் ரூ.2 ஆயிரம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்நிர்மலாவுக்கு சீனாவில் வரவேற்பு2017-ல் உலக பொருளாதார வளர்ச்சி 3.6சதவீதம்: ஐ.எம்.எப்., தகவல்மனைவியை கணவன் அடிக்கலாம் : பீஹார் பெண்கள் அதிர்ச்சி பதில்காஷ்மீர் என்கவுன்ட்டர் : 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் போயிருப்பேன். ஆனால் அவர் தடுத்துவிட்டார். ஓவியா‛தாமதமாக வந்தால் நடவடிக்கை'

பழங்குடியின மக்களின் கலைப் பொருட்கள் ஊட்டி ஆராய்ச்சி மையத்தில் பார்க்கலாம்

0

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இவர்களில் பெரும்பாலான மக்கள் நவீன உலகத்திற்கு வந்து விட்டாலும் ஒரு சில பழங்குடிகள் இன்றளவும் பழமை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களில் பெரும்பாலானவர்கள் வேட்டையாடுவதை விட்டுவிட்டனர். ஆனால் இவர்களின் மூதாதையர்கள் உணவிற்காக வேட்டையாடி வந்தனர். அவர்கள் வேட்டையாடவும், சமைக்கவும் இயற்கை சார்ந்த பொருட்களையே அதிகம் பயன்படுத்தி வந்ததுள்ளனர். இந்த பொருட்கள் பெரும்பாலான பழங்குடியின மக்களின் வீடுகளில் தற்போது பார்க்க முடியுமா என்பது கேள்வி குறியே.

ஆனால் ஊட்டி அருகேயுள்ள எம்.பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் இது போன்ற பொருட்களை நாம் பார்க்க முடியும். இந்த ஆராய்ச்சி மையத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு வகையான பழங்குடியினர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இசை கருவிகள், விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய கல்லால் ஆன அம்பு, வில், கோடாரிகள் உள்ளன. மேலும் சமையலுக்காக பயன்படுத்திய மண் பாண்டங்கள், கற்களால் ஆன பாண்டங்களும் வைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பெண்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அவர்கள் குடியிருப்புக்களுக்காக பயன்படுத்திய பொருட்கள், கலை நயம் மிக்க விளையாட்டு பொருட்கள், போர் கருவிகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பழங்குடி மக்களின் கலை நயம் மிக்க பாரம்பரிய பொருட்கள் மட்டுமின்றி, அந்தமான் நீக்கோபார் தீவுகளில் வாழும் பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.இது தவிர ஒவ்வொரு பழங்குடியின மக்களும் 200 ஆண்டுகளுக்கு முன் தாங்கள் வாழ்வதற்காக பயன்படுத்திய குடியிருப்புக்களின் மாதிரிகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

இவைகளை காண பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலா பயணிகளும் செல்லலாம் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. இனி ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எம்.பாலாடா பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திற்கு சென்று தமிழகம் மற்றும் அந்தமான நிகோபார் தீவுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் மூதாதையர்கள் பயன்படுத்திய பல அரிய வகை கலை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை காணலாம்.

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.