Breaking News
உணவக மேலாண்மை படிப்பிற்கான NCHM JEE 2017 தேர்வுக்கு ரெடியா?

இந்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் National Council for Hotel Management and Catering Technology (NHCMT), Indra Gandhi National Open University (IGNOU) இணைந்து நடத்தும் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலைப் பட்டப்படிப்பு சென்னை, மும்பை உட்பட 21 நகரங்களில் இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் செயல்படும் உணவக மேலாண்மை நிறுவனங்கள் (Institute of Hotel Management), மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் 19 மாநில உணவக மேலாண்மை நிறுவனங்கள், புதுடெல்லியிலுள்ள பொதுத்துறையின் கீழ் செயல்படும உணவக மேலாண்மை நிறுவனம் மற்றும் 14 தனியார் அமைப்பின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் என்று மொத்தம் 55 கல்வி நிறுவனங்களில் மூன்றாண்டு அளவிலான விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் (Hospitality and Hotel Administration) எனும் இளநிலைப் பட்டப்படிப்பில் 8,124 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கான சேர்க்கையினைப் பெற NCHM JEE 2017 நுழைவுத் தேர்வு அவசியம்.

கல்வித்தகுதி
பிளஸ் டூ தேர்வில் ஆங்கிலத்தைப் பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களோடு, 2017 ஆம் ஆண்டு தேர்வு எழுதவிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வின்போது தேர்ச்சிச் சான்றிதழினைக் சமர்ப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு
பொது மற்றும் ஓபிசி வகுப்பினர் 1-7-2017 அன்று 22 வயதாக (1-7-1995 க்குப் பிறகு பிறந்தவர்கள்) இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வுண்டு.

விண்ணப்பம்
https://applyadmission.net/nchmjee2017/ எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நொய்டாவிலுள்ள தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கத் தொழில்நுட்பக்குழு (NHCMT) அலுவலகத்திலும், இக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலும் விற்பனை செய்யப்படும் விண்ணப்பத்தினைப் பெற்றும் விண்ணப்பிக்கலாம்.

இணைய வழியில் விண்ணப்பிக்கப் பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.800/ எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ரூ.400/- என்றும், அஞ்சல்வழி விண்ணப்பத்திற்குப் பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ/900/ எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ரூ/450/ விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். இணையம், அஞ்சல் என இருமுறை விண்ணப்பத்திற்கும் கடைசி நாள்: 14-4-2017.

தேர்வு நாள்
இந்தியா முழுவதுமுள்ள 33 தேர்வு மையங்களில் 29-4-2017 அன்று காலை 10.00 முதல் 1.00 மணி வரை இந் நுழைவுத்தேர்வு நடைபெறவிருக்கிறது. தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை 19-4-2017 முதல் 29-4-2017 வரை மேற்காணும் இணையதளத்தில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் மே மாதம் 3வது வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கை
இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகள் இதற்குப் பொருந்தும். தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியிடப்படும். மேலும் தகவல்களுக்கு 1800 180 3151 எனும் கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.