Breaking News
அடடே…ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

மொழி

Offhand…? முன் தயாரிப்பில்லாத…?

அலுவலகப் பணியில் ஆழ்ந்திருந்த ரகுவை நோக்கி வந்த ரவி, “நேற்றைய ஒரு செய்தித்தாளில் off hand என்ற வார்த்தைக்கு ‘முன் தயாரிப்பில்லாத’ என்ற ஒரு பொருள் கொடுக்கப்பட்டிருந்தது. எனக்கு சரியா புரியல… உங்க பாணியில அத கொஞ்சம் சொல்றீங்களா சார்?” என்றபடி வந்தமர்ந்தான்.

“எனக்கும் அதே சந்தேகம்தான் சார்” என்றபடி ப்ரவீணாவும் கையில் காபி கோப்பைகளுடன் வந்தமர்ந்தாள். தனக்கான கோப்பையைக் கையில் எடுத்த ரகு, “தாராளமா புரிய வக்கிறேன். Mere translation of words in vernacular language may confuse you a lot. அதனால.. எப்பவுமே context based or example based learningதான் நல்லது. offhand என்பதை பலவகைகளில் உபயோகப்படுத்தலாம். உதாரணமா சொல்லணும்னா…

1. without planning or thinking ahead, with little or no preparation of fore thought;She gave an offhand speech. (எந்தவித முன் யோசனையோ அல்லது எண்ணமோ இன்றி) offhand excuse சால்ஜாப்பு (சால் (ஹிந்தி) என்றால் வருடம், ஜாப்பு என்பது ஜவாப்(ஹிந்தி)… தமிழில் பதில் என்றும் பொருள். அதாவது, எந்த யோசனையும் இல்லாம வருஷம் பூராவும் அதே பதில்தான்.

2. careless, without sufficient thought or consideration He doesn’t realize how hurtful his offhand remarks can be. (அறிவே இல்லாத அவனது கருத்துகள் அடுத்தவரைக் காயப்படுத்தும் என்பதை அவன் உணருவதில்லை) She seemed offhand about the danger behind it. (பின்வரும் அபாயத்தை அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.)

3. curt, abrupt, unfriendly She was quite offhand with me yesterday. (என்னை அவள் நேற்று கொஞ்சம்கூட கண்டுகொள்ளவே இல்லை).

4. Without prior thought or preparation – “I couldn’t give the information offhand” (திடீர்னு கேட்டா என்ன செய்யறது?… அதனால சரியான தகவலைக் கொடுக்க முடியவில்லை) “we decided offhand to go to Canada” (ஆல் அட் எ சடன் கனடா போகலாம்னு முடிவு பண்ணினோம்)

5. இதே மாதிரி எந்தவித முன்தயாரிப்பின்றி மேடையில் பேசுவதை offhand speech, ad lib speech, extempore speech, impromptu speech என்றும் சொல்லலாம்.

6. எந்தவிதமான முன் யோசனையும் இல்லாமல் எடுக்கும் அதிரி புதிரி முடிவுகளை off the cuff decisions என்றும் சொல்லலாம். இப்போது புரிந்திருக்குமே?!” என்று கேட்டார் ரகு. “ரொம்பவே தெளிவா புரியுது சார்” என்று ஒரே குரலில் சொல்லிவிட்டு ரவியும், ப்ரவீணாவும் தங்கள் இருக்கைக்குச் சென்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.