Latest News
3 நாட்களுக்கு வறண்ட வானிலை‘பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம்’ - இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடிவிடிவு! 30 ஆண்டு மக்கள் போராட்டத்திற்கு...கவுல்பஜார் அடையாறு ஆற்றில் பாலம்ரூ.5.93 கோடியில் பணிகள் விறுவிறுபுல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கினால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: காங்கிரஸ்அமித்ஷா சென்னை வருகை ரத்துமோசடி மேல் மோசடிகள்... விசாரணைமேல் விசாரணைகள்: 2020 தேர்தல் வரை தாங்குவாரா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்?கிரண்பேடியை மாற்றனும்: உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி சபாநாயகர் கடிதம்பிரதமர் வங்கிகளை கேள்வி கேட்காதது ஏன்? : விஜய் மல்லையாதமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்தமிழகத்தில் 4 முனைப்போட்டிக்கு வாய்ப்புகூட்டணி அமைக்க அ.தி.மு.க., தி.மு.க. மும்முரம்தொகுதிகள் பிரிப்பதில் இழுபறி

காரமடை பரளிக்காடு செல்ல 14ம் தேதி முதல் அனுமதி சுற்றுலா பயணிகளுக்கு மரவீடுகள்

0

கோவை மேட்டுப்பாளையம் ரோடு காரமடையில் இருந்து வெள்ளியங்காடு சாலையில் பில்லூர் அணை அருகே பரளிக்காடு உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலா தலம் கோவையில் இருந்து சுமார் 70கி.மீ தொலைவில் இருக்கிறது. சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார நாட்களில் 40 பேர் கொண்ட குழுவினர் சென்றால் மட்டும் அனுமதி வழங்கப்படும்.

பெரியவர்களுக்கு ரூ.300, சிறியவர்களுக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு வனத்துறையில் முன்பதிவு செய்ய வேண்டும். இதில், சுமார் 4 கிலோ மீட்டர் பரிசல் பயணம், ஆற்றில் பாதுகாப்பான குளியல், உணவு, மாலை நேரத்தில் மலையில் டிரக்கிங் என ஒரு நாள் சுற்றுலா தலமாக இருந்தது. இந்நிலையில், தற்போது சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு 14ம் தேதி முதல் சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான புக்கிங் துவங்கியுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது: பரளிகாட்டில் சுற்றுலா பயணிகள் தங்க வசதி ஏற்படுத்தியுள்ளோம். 8 பேர் தங்கும் வசதி கொண்ட 3 மரவீடுகள், 5 பேர் தங்கும் வசதி கொண்ட 3 மரவீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர வழக்கம் போல் பரிசல், ஆற்று குளியல், டிரக்கிங் அழைத்து செல்லப்படும். விரைவில் மரத்தில் பரண் அமைத்து விலங்குகள் தண்ணீர் குடிப்பதை சுற்றுலா பயணிகள் பார்க்கவும், ஆற்றில் மீன் பிடித்து விளையாடவும், ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு கயிறு மூலம் ஜிப் லைன் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். வரும் 14ம் தேதி முதல் புது பொழிவுடன் பரளிக்காடு செயல்பட உள்ளது. புக்கிங் செய்ய 90470-51011 அல்லது 0425-4275423 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.