Breaking News

தேவையானவை:
மட்டன் – அரை கிலோ
உருளைக்கிழங்கு – 200 கிராம்
தக்காளி – 100 கிராம்

விழுதாக அரைக்க:
பெரிய வெங்காயம் – 50 கிராம்
இஞ்சி – 10 கிராம்
பூண்டு – 15 கிராம்
காய்ந்த மிளகாய் – 8 கிராம்
முழுமல்லி(தனியா) – 5 கிராம்
சீரகம் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
பட்டை – ஒரு துண்டு
வினிகர் – 4 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தண்ணீர் – சிறிதளவு(தேவைபட்டால்)
எண்ணெய் – 30 மிலி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
உருளைக்கிழங்கு, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மட்டனை மீடியம் சைஸ் பீஸ்களாக நறுக்கி, நன்கு கழுவி சுத்தம்செய்து கொள்ளவும்.

விழுதாக அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, அந்த மசாலாவில் மட்டனைப் புரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, அதில் ஊற வைத்த மாசாலா மட்டனைச் சேர்த்து வதக்கவும். தேவைப்பட்டால் கலவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

மட்டனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து, வாணலியை மூடி போட்டு மட்டனை நன்கு வேகவிடவும். கிரேவி சிறிது கெட்டியானவுடன், கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு இந்த மட்டன் விண்டாலு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

குறிப்பு:
* மட்டனுடன் மசாலா சேர்த்தபின்னர் தேவைப்பட்டால் தண்ணீர் சிறிதளவு சேர்க்கலாம். மசாலாவை சேர்க்கும் முன்பே தண்ணீர் சேர்த்தால், மசாலா பச்சை வாசனையுடன் இருப்பதுடன், சுவையும் குறைந்துவிடும்.

* மட்டன் கலவையில் உப்பு சேர்த்ததும் வெந்நீர் சேர்ப்பதால் கலவை சீக்கிரமாக வெந்துவிடும். பச்சைத் தண்ணீர் சேர்த்தால், கலவை மீண்டும் சூடாகி தயாராக நேரம் அதிகமாகும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.