Breaking News
மேத்தமேட்டிகல் இன்ஸ்ட்டியூட்டில் ஸ்காலர்ஷிப்போடு ஆய்வுப்படிப்பு படிக்கலாம்!

கணிதத்தைக் கற்பித்தல் மற்றும் ஆய்வு செய்வதற்காக, 1989 ஆண்டில் ஸ்பிக் சயின்ஸ் பவுண்டேஷன், சென்னையில் சென்னை மேத்தமேட்டிகல் இன்ஸ்ட்டியூட்டைத் தொடங்கியது 1996 ஆம் ஆண்டில் தன்னாட்சி நிறுவனமாகி, 2006 இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்ந்தது மேத்தமேட்டிகல் இன்ஸ்ட்டியூட். இதில் உதவித்தொகையுடன் கணிதப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படிப்புகள்
3 ஆண்டு கணிதம் மற்றும் கணினி அறிவியல் (Mathematics and Computer Science), கணிதம் மற்றும் இயற்பியல் (Mathematics and Physics) எனும் இரு பாடப்பிரிவுகளில் இளநிலை அறிவியல் (B.Sc.Hons.) படிப்புகளும், இரண்டு ஆண்டு கணிதம் (Mathematics) கணிதப் பயன்பாடுகள் (Application of Mathematics), கணினி அறிவியல் (Computer Science) எனும் 3 பாடப்பிரிவுகளில் முதுநிலை அறிவியல் (M.Sc) பட்டப்படிப்புகளும், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் பாடப்பிரிவுகளிலான முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.

கல்வித்தகுதி
இளநிலை அறிவியல் (B.Sc.Hons.) பாடப்பிரிவுகளுக்கு பிளஸ் டூ வில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி தேவை. M.Sc பட்டப்படிப்புகளில் கணிதம் மற்றும் கணிதப் பயன்பாடுகள் எனும் இரு பாடப்பிரிவுகளுக்கும் கலை, அறிவியல், கணிதம், புள்ளியியல், பொறியியல் (அ) தொழில்நுட்பம் (B.A / B.Sc / B.Math / B.Stat / B.E / B.Tech) பாடத்தில் இளநிலைப் பட்டம் அவசியம். கணினி அறிவியல் பாடப்பிரிவிற்கு மேற்காணும் இளநிலைப் பட்டமும், கணினி அறிவியல் பாடத்தில் அறிவும் தேவை.

ஆய்வுப் படிப்புகளில் கணிதம் பாடப்பிரிவிலான முனைவர் பட்டத்திற்குக் கணிதப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.Sc) (அ) அதற்கிணையான படிப்புகள், பொறியியல் (அ) தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் (B.E / B.Tech) தேவை. கணிதத்தில் ஆய்வுக்கான சிறப்புத் தகுதியுடைய பிஎஸ்சி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

கணினி அறிவியல் பாடப்பிரிவிலான முனைவர் பட்டத்திற்குப் பொறியியல் (அ) தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் (B.E / B.Tech) அறிவியல் (அ) கணினிப் பயன்பாட்டியலில் எம்எஸ்சி/எம்சிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் பாடத்தில் ஆய்வுக்கான சிறப்புத் தகுதியுடைய பிஎஸ்சி பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இயற்பியல் முனைவர் பட்டத்திற்கு, இயற்பியலில் எம்எஸ்ஸி (அ) இயற்பியல், பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளநிலைப் பட்டம் (B.Sc Physics / B.E / B.Tech) பெற்று, ஆய்வுக்கான சிறப்புத் தகுதியுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கணித ஆய்வுப்படிப்புக்கு NBHM ஆய்வு உதவித்தொகை தகுதி பெற்றவர்களும், கணினி அறிவியல் மற்றும் இயற்பியல் முனைவர் பட்ட ஆய்வுப்படிப்புகளுக்கு ஜெஸ்ட் தேர்வில் (Joint Entrance Screening Test (JEST – 2017) தகுதி மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு நுழைவுத்தேர்வுக்குப் பதில், இத்தகுதித்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

விண்ணப்பம்
http://apply2017.cmi.ac.in/ எனும் வெப்சைட்டில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இளநிலைப் படிப்புகளுக்கு ரூ750/-, 4 வகை முதுநிலைப்படிப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ 750/-, பல்வேறு பிரிவுகளுக்கு ரூ. 900/- என்று ஆன்லைனில் செலுத்தலாம். “Chennai Mathematical Institute’’ எனும் பெயரில் சென்னைக்கு டிடியாகவும் அனுப்பலாம். அஞ்சல் வழியில் அச்சிட்ட விண்ணப்பம் பெற, அனைத்துப் படிப்புகளுக்கும் ரூ 900/- க்கான டிடியோடு

“Admissions Committee Attn : Request for Application Form 2017, Chennai Mathematical Institute, H1, SIPCOT IT Park, Siruseri, Kelambakkam – 603103, Tamil Nadu” எனும் முகவரிக்கு வேண்டுதல் கடிதம் சேர்த்து அனுப்பி பெறலாம். ஆன்லைனிலும், அஞ்சல் வழியிலுமான விண்ணப்பங்களுக்கு கடைசி நாள்: 8-4-2017.

நுழைவுத் தேர்வு
18-5-2017 அன்று இந்தியாவிலுள்ள 23 நகரங்களிலுள்ள தேர்வு மையங்களில் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். இளநிலைப் பட்டப்படிப்புகளுக்குக் காலை 9.30 – 12.30 மணி வரையிலும், முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கு மதியம் 2.00- 5.00 மணி வரையிலும் நுழைவுத்தேர்வு நடைபெறும். நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை 1-5-2017 முதல் வெப்சைட்டிலிருந்து பெறலாம்.

மாணவர் சேர்க்கை
இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களின் நுழைவுத்தேர்வு மதிப்பெண், முந்தைய படிப்பு மதிப்பெண்களைக்கொண்டு தகுதிப்பட்டியல் தயாரித்து நேர்காணல் நடத்தி மாணவர் சேர்க்கை தீர்மானிக்கப்படும். முனைவர் ஆய்வுப் பட்டப்படிப்புகளுக்குச் சென்னையில் நேர்காணல் நடைபெறும்.

உதவித்தொகை
இளநிலை மாணவர்களுக்கு ரூ. 4000/- முதுநிலை மாணவர்களுக்கு ரூ. 6000/- முனைவர் மாணவர்களுக்கு ரூ. 25000/- என்று மாதந்தோறும் உதவித்தொகை அளிக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு
http://www.cmi.ac.in/admission என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தொலைப்பேசி : (044) 6780900, (044) 27470226 / 0229, (044) 32093441 / 3442

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.