Breaking News
வெற்றியை கோட்டைவிட்டது பஞ்சாப் அணி

ஐபிஎல் தொடரில் நேற்று இரவு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட் டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியில் ஆப் கானிஸ்தானை சேர்ந்த முகமது நபி அறிமுக வீரராக களமிறங்கினார். மேலும் அந்த அணியில் ஆசிஷ் நெஹ்ரா, பிபுல் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு பரிந்தர் ஷரண், சித்தார்த் கவுல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் அணயில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. வருண் ஆரோனுக்கு பதிலாக இஷாந்த் சர்மா களமிறங்கினார்.

முதலில் பேட் செய்த ஹைதரா பாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான டேவிட் வார்னர் 54 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண் டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நமன் ஓஜா 20 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 34 ரன்களும், ஷிகர் தவண் 15, ஹென்ரிக்ஸ் 9, தீபக் ஹூடா 12, முகமது நபி 2, ரஷித் கான் 6 ரன்கள் சேர்த்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அக் ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 160 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்தது. ஹசிம் ஆம்லா 0, மேக்ஸ்வெல் 10, மோர்கன் 13, டேவிட் மில்லர் 1, விருத்திமான் சாஹா 0, அக் ஷர் படேல் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

82 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையிலும் தொடக்க வீர ரான மனன் வோரா 35 பந்துகளில் அரை சதம் அடித்து வெற்றிக்காக போராடினார். இதற்கிடையே மோகித் சர்மா 10 ரன்னில் ஆட்ட மிழந்தார். கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட் டது. 19-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் முதல் பந்தில் கரியப்பாவை (1) ரன்னில் போல்டாக்கினார். அடுத்த பந்தில் இஷாந்த் சர்மா 1 ரன் சேர்த்தார்.

3-வது பந்தை எதிர்கொண்ட வோரா எல்பிடபிள்யூ ஆனார். அவர் 50 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் சேர்த்தார். அவர் ஆட்டமிழந்ததும் பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது. இந்த ஓவரில் 5 ரன்களை மட்டும புவனேஷ்வர் குமார் விட்டுக்கொடுத்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சித்தார்த் கவுல் வீசினார். முதல் பந்தில் சந்திப் சர்மா 2 ரன்கள் சேர்த்தார். அடுத்த பந்தை வைடாக வீசினார். 2-வது பந்தில் ஒரு ரன் சேர்க்க 3-வது பந்தையும் சித்தார்த் வைடாக வீசினார். இதனால் 4 பந்துகளுக்கு 6 ரன்கள் என்ற நிலை உருவானது. 3-வது பந்தை வீணடித்த இஷாந்த் சர்மா (2) அடுத்தப் பந்தில் போல்டானார்.

முடிவில் 19.4 ஓவர்களில் பஞ்சாப் அணி 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இத னால் ஹைதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.