Breaking News
ஹசிம் ஆம்லா சதம் வீணானது: மும்பை அணிக்கு 5-வது வெற்றி- 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது

ஐபிஎல் தொடரில் நேற்றுமுன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டேவில்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் 51 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 89 ரன்களும், ஷிகர் தவண் 50 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் விளாசினர். யுவராஜ் சிங் 3, ஹென்ரிக்ஸ் 12, தீபக் ஹூடா 9 ரன்கள் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.

192 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 50, சஞ்சு சாம்சன் 42 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் முகமது சிராஜ் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

கடைசி கட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடிய நிலையில் மேத்யூஸ் மந்தமாக விளையாடியது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 23 பந்தில் 31 ரன்கள் எடுத்த மேத்யூஸ் ஆட்டம் முடிவடைய ஒரு பந்து மீதம் இருக்கும் போது ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2-வது பந்தில் சிக்ஸர் அடித்த மேத்யூஸ், 3 மற்றும் 4-வது பந்தை வீணடித்தார். இந்த ஆட்டத்தில் அதிரடி வீரரான கிறிஸ் மோரிஸூக்கு பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் களமிறங்க வேண்டிய இடத்தில் மேத்யூஸ் களமிறக்கப்பட்டார்.

காயம் காரணமாக இருமாத காலத்துக்கும் மேலாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத மேத்யூஸ் தனது மோசமான பார்மால் பேட்டிங்கில் தடுமாறி னார். ஒருவேளை மோரிஸ் கள மிறங்கியிருந்தால் டெல்லி அணி வெற்றி பெற வாய்ப்பிருந்திருக் கும்.

வெற்றி குறித்து ஹைதராபாத் கேப்டன் வார்னர் கூறும்போது, “இந்த சீசனில் வில்லியம்சன் முதல் ஆட்டத்திலேயே பெரிய அளவில் ரன் சேர்த்துள்ளார். ஷிகர் தவணுடன் இணைந்து அவர் அருமையாக பேட் செய்தார். ஒரு அணியாக நாங்கள் இணைந்து செயல்படுகிறோம்.

எங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நாங்கள் அறிவோம். அணியின் பந்து வீச்சு மீண்டும் சிறப்பாக அமைந்தது. புவனேஷ்வர் குமார் உட்பட இளம் வேகப்பந்து வீச்சா ளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களது திறன் பாராட்டத்தக்கது” என்றார்.

தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர்கான் கூறும்போது, “180 ரன்கள் இலக்கே அடையக்கூடியதாக இருந்திருக் கும். கடைசி ஓவரில் நான் அதிக ரன்கள் (17) விட்டுக் கொடுத்து விட்டேன். புவனேஷ்வர் குமார் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. சரியான நீளத்தில் வீசும் அவர், அணியை சிறந்த முறையில் பாதுகாக்கிறார்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.