Breaking News
சாய்னா தோல்வி

ஆசிய சாம்பியன்ஷிப் பாட் மிண்டன் தொடரில் இந்தியா வின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதே வேளையில் சாய்னா நெவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும் 3-ம் நிலை வீராங்கனையுமான சிந்து, 21-8, 21-18 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவை சேர்ந்த தினார் தயா ஆஸ்டினை வீழ்த்தினார்.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய சாய்னா 19-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி ஜப்பானின் சயகா சடோவிடம் தோல்வியடைந்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.