Breaking News
பாக்., மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தாவூத்?

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஆபத்தான நிலையில் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிழலுலக தாதா:

மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில், 257 பேர் கொல்லப்பட்டனர்; 1,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், சவுதி அரேபியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்தான். கராச்சி நகரில் ரகசியமாக வசித்து வருவதாக இந்தியா கூறும் குற்றச்சாட்டை, பாக்., அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மும்பை குண்டு வெடிப்பு உட்பட, பல்வேறு வழக்குகளிலும், இவன் தேடப்பட்டு வருகிறான்.

உயிருக்கு ஆபத்து:

இந்நிலையில், இதயநோய் காரணமாக, கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் அவரது உடல்நிலை உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இத்தகவலை அவனது கூட்டாளி சோட்டா சாஹில் மற்றும் அவனது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். தாவூத் நிலைமையை இந்திய உள்வுத்துறை அதிகாரிகள் தொடந்து கண்காணித்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.