Breaking News
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் பிஎச்.டி படிக்கலாம்!

திருவனந்தபுரத்திலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் (Indian Institute of Science Education and Research) 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கும் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பிற்கான சேர்க்கையைப் பெற விண்ணப்பிக்கலாம்.

மூன்று வகை முனைவர் படிப்புகள்
இந்நிறுவனத்தில் Biological Sciences, Chemical Sciences, Physical Sciences எனும் 3 வகையான அறிவியல் பாடங்களில் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதிகள்
உயிரிய அறிவியல்கள் பாடப்பிரிவிற்கு உயிரியல் அறிவியல்கள் / வேதியியல் அறிவியல்கள் / இயற்பியல் அறிவியல்கள் / கணிதம் / உயிரித் தொழில்நுட்பங்கள் / வேளாண்மை அறிவியல்கள் / கால்நடை அறிவியல்கள் (Biological Sciences/Chemical Sciences/Physical Sciences/ Mathematics/ Bio informatics/ Agricultural Sciences/ Veterinary Sciences) ஆகிய பாடங்களில் ஏதாவதொன்றில் பிளஸ் டூவிற்குப் பிறகு, 5 ஆண்டுகள் முதுநிலை அறிவியல் (M.Sc) பட்டம் (அ) அலோபதி மருத்துவத்தில் இளநிலைப் பட்டம் (M.B.B.S) 60% மதிப்பெண்களுடன் (புள்ளிக் குறியீட்டில் (GCPA) 6.5) ஆகஸ்ட் 1 தேதிக்கு முன்பு பெற்றிருத்தல் தேவை. CSIR-UGC-JRF/ DBT-JRF (Category I) / ICMR-JRF / 1-90 இடங்களுக்குள் GATE (Ecology and Evolution) / JGEEBILS (GS-2017) தகுதி பெற்றிருக்க வேண்டும்

வேதியியல் அறிவியல்கள் பாடப்பிரிவிற்கு வேதியியல் அறிவியல் பாடமொன்றில் பிளஸ் டூவிற்கு பின்பு 5 ஆண்டுகள் கொண்ட முதுநிலை அறிவியல் (M.Sc) பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் (புள்ளிக் குறியீட்டில் (GCPA) 6.5) ஆகஸ்ட் 1 தேதிக்கு முன்பு பட்டம் பெற்றிருத்தல் தேவை. அத்துடன் CSIR-UGC-JRF/ ஆகஸ்ட் 1, 2017க்கான GATE (அ) DST INSPIRE Ph.D ஆய்வு உதவித்தொகை தகுதி பெற்றிருப்பது அவசியம்.

இயற்பியல் அறிவியல்கள் பாடப்பிரிவிற்கு இயற்பியல் அறிவியல்கள் / மூலப்பொருட்கள் அறிவியல்கள் (Physical Sciences / Materials Science) பிளஸ் டூவிற்குப் பின்பு 5 ஆண்டுகள் கொண்ட முதுநிலை அறிவியல் (M.Sc) பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் (புள்ளிக்குறியீட்டில் (GCPA) 6.5) ஆகஸ்ட் 1 தேதிக்கு முன்பாகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அ) உயிரிய மருத்துவம் / கருவி மயமாக்கல் / மின்னியல் / மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு ((Biomedical / Instrumentation / Electrical / Electronic and Communication Engineering) பொறியியல் பாடமொன்றில் 60% மதிப்பெண்களுடன் (புள்ளிக்குறியீட்டில் (GCPA) 6.5) ஆகஸ்ட் 1 தேதிக்கு முன்பாக முதுநிலைப் பட்டம் (M.E / M.Tech) பெற்றிருக்க வேண்டும். அத்துடன் CSIR-UGC-JRF/ ஆகஸ்ட் 1, 2017க்கான GATE (2016) / CSIR-UGC-JRF/ JEST-2017 / INSPIRE Ph.D தகுதி தேவை.

விண்ணப்பம்
http://appserv.iisertvm.ac.in/phd/ இணையதளத்திற்குச் சென்று, விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200/-, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ரூ.100/- என்று செய்முறைக் கட்டணத்தைப் பாரத மாநில வங்கிக் கணக்கு (Powerjyoti Account) வழியில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30-4-2017.

மாணவர் சேர்க்கை
தகுதியுடையவர்களுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு 3-5-2017 அன்று இந்நிறுவனத்தின் http://www.iisertvm.ac.in எனும் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன் பின்னர், அந்தத் தகுதிப்பட்டியலுள்ளவர்களில், உயிரியல் அறிவியல்கள் பாடப்பிரிவுக்கு 5-6-2017 முதல் 7-6-2017 வரையிலான 3 நாட்களும், வேதியியல் அறிவியல்கள் பாடப்பிரிவுக்கு 2-6-2017 முதல் 3-6-2017 வரையிலான 3 நாட்களும், இயற்பியல் அறிவியல்கள் பாடப்பிரிவுக்கு 14-6-2017 முதல் 16-6-2017 வரையிலான 3 நாட்களும் நேர்க்காணல்கள் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கூடுதல் தகவல்களுக்கு http://appserv.iisertvm.ac.in/phd/ எனும் இணையதளத்தைக் காணலாம் (அ) “IISER – Thiruvananthapuram, Computer Science Building, College of Engineering Trivandrum Campus, Trivandrum – 695016, Kerala” எனும் முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ (அ) இந்நிறுவனத்தின் 0471 – 2597459 / 2597438 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.