Breaking News
பேஷன் ஷோவில் அனைவரையும் கவர்ந்த பிரியங்கா சோப்ராவின் ஆடை

நியூயார்க்கில் உள்ள மெட் கலாவில் நடந்த பேஷன் நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். இதில் அவர் அணிந்து வந்த ‘ட்ரென்ஸ்கோட்’ அனைவரையும் கவர்ந்தது. தலை முதல் கால் வரை இவரின் சிகை அலங்காரம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. பிரியங்காவின் முடி அலங்காரம் மற்றும் கணுக்காலில் அவர் அணிந்திருந்த கறுப்பு நிற பூட்ஸ், அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

பிரியங்காவின் இந்த ட்ரென்ஸ்கோட்டை வடிவமைத்தவர், ரால்ப் லாரன். இவர், விழாவின்போது பிரியங்காவின் கூடவே இருந்தார். ஃபேஷன் அண்ட் லைஃப் இதழில், பிரியங்காவின் இந்த ஆடை சிறந்த ஆடையாக இடம்பெற்றது. பிரியங்காவின் இந்த ட்ரென்ஸ்கோட்டைப் பற்றி டுவிட்டரில் பல தரப்பட்ட விவாதங்கள் நடந்துவருகின்றன.

சிலர், இந்த ஆடை துப்பறிவாளர் மாதிரி உள்ளது எனவும், இன்னும் சிலர் பிரியங்கா பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக இருப்பார் போல எனவும் ட்விட்டுகளைத் தட்டியுள்ளனர். யார் என்ன சொன்னாலும், இன்று நியூயார்க் நகரின் டாப் செய்தி, பிரியங்காவின் இந்த ட்ரென்ஸ்கோட் தான்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.