Breaking News
மத்திய அரசு வெளியிட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு 6–வது இடம் சென்னைக்கு 235–வது இடம்

நாடு முழுவதும் தூய்மையை பேணுவதற்காக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்கள் அடிக்கடி பட்டியலிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ‘தூய்மை ஆய்வறிக்கை–2017’ என்ற பெயரில் 434 நகரங்கள் கொண்ட புதிய பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

இந்த பட்டியலில் முதலிடத்தை மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் பெற்றுள்ளது. 2–வது இடம் போபால் நகருக்கு கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடம் அதாவது அழுக்கான நகரம் என்ற பெயரை உத்தரபிரதேசத்தின் கோண்டா நகர் பெற்று இருக்கிறது.

தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகத்தின் திருச்சி நகரம் 6–வது இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் தமிழகத்தின் மேலும் 27 நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதன்படி கோவை (16–வது இடம்), கும்பகோணம் (37), ஈரோடு (42), மதுரை (57), தாம்பரம் (62), திருப்பூர் (68), ஓசூர் (82), வேளாங்கண்ணி (84), திண்டுக்கல் (106), வேலூர் (108), காரைக்குடி (110), புதுக்கோட்டை (113), ராஜபாளையம் (125), காஞ்சீபுரம் (127), சேலம் (135), பல்லாவரம் (155), ஆவடி (169), நாகர்கோவில் (174), நாகப்பட்டினம் (185), திருநெல்வேலி (193), தஞ்சாவூர் (198), தூத்துக்குடி (223), சென்னை (235), திருவண்ணாமலை (238), கடலூர் (250), ஆம்பூர் (267), ராமேசுவரம் (268) போன்ற நகரங்கள் இந்த பட்டியலில் உள்ளன.

புதுச்சேரியை பொறுத்தவரை புதுச்சேரி நகரம் 189–வது இடத்தையும், ஒழுகரை 206–வது இடத்தையும் பெற்றுள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.