Breaking News
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: ஷயானிடம் தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள் யார்?

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் ஷயானிடம் தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள் யார், யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசார ணையில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒருவரைப் பிடிக்க தனிப்படை பிரிவு போலீஸார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கேரள மாநிலம் மலப்புரம் சிறையில் இருந்த ஜித்தின் ஜாய் மற்றும் ஜம்சீர் அலியை தனிப்படை பிரிவு போலீஸார் கடந்த 3-ம் தேதி கோத்த கிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி னர். அவர்கள் இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசா ரிக்க நீதிபதி தர் அனுமதித்தார். இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் காலம் முடிவடைந்ததால், இருவரையும் நேற்று மாலை கோத்தகிரி நீதிமன்றத்தில் போலீ ஸார் ஆஜர்படுத்தினர்.

பின்னர், கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கோடநாடு எஸ்டேட்டில் பணம், தங்கம், வைரக் கற்கள், சொத்து ஆவணங்கள் கொள்ளை போன தாக தகவல்கள் வெளியாகி வரு கின்றன. இதைக் கண்டுபிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கொள்ளை போன தங்கம் மற்றும் வைரக்கற்களை, கொள்ளையர்கள் தங்கள் வசம் வைத்தால் சிக்கிக்கொள்வோம் என்பதால் விற்பனை செய்திருக் கலாம் அல்லது அடகு வைத்திருக் கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனால், நீல கிரி மாவட்டம், கோவை, சேலம், கேரளாவில் உள்ள நகைக் கடை களில் தனிப்படை போலீஸார் ரகசிய மாக விசாரணை நடத்தி வருகின் றனர்.

முக்கிய நபரான ஷயானின் தொடர்பில் உள்ளவர்கள் குறித் தும் விசாரணை நடத்தி வருகின் றனர். செல்போன் மூலம் அவர் யார் யாரிடம் பேசியுள்ளார், அவரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பன போன்ற தகவல்களைகச் சேகரித்து வருகின்றனர்.

இதில், பல அரசியல் பிரமுகர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் குற்றத்தில் ஈடுபட்ட 11 பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒருவரைத் தேடி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.