Breaking News
இந்திய அறிவியல் நிறுவனத்தில் கணினி நிர்வாக பணிகள்

கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தில் ‘சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டர் டிரெய்னி’ பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:

System Administrator:

11 இடங்கள் (பொது-5, ஓபிசி-4, எஸ்சி-2). இவற்றில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

கணினி அறிவியல்/தகவல் அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ டெலி கம்யூனிகேசன் ஆகிய பாடங்களில் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.இ., அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் எம்எஸ்சி அல்லது எம்சிஏ. ஜூனில் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.12 மாதங்கள் பயிற்சியின் போது உதவித் தொகை ரூ.12,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.150/- (எஸ்சி., எஸ்டியினருக்கு ரூ.75/-). இதை The Registrar, INDIAN INSTITUTE OF SCIENCE என்ற பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் http://www.satp.serc.iisc.ernet.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Assistant Registrar,
Unit-IB,
INDIAN INSTITUTE OF SCIENCE,
BANGALORE,
PIN: 560012.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 12.5.2017.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.