Breaking News
திருமண வாழ்க்கையால் விளையாட்டுத்திறன் பாதிக்கப்படவில்லை; மல்யுத்த வீராங்கனை சாக்ஷி பேட்டி

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீராங்கனை 24 வயதான சாக்ஷி மாலிக் அளித்த ஒரு பேட்டியில், ‘என்னை பொறுத்தவரை மல்யுத்தம் என்பது பிரார்த்தனை செய்வது மாதிரி. வெற்றிக்கு குறுக்குவழியை நாடக்கூடாது என்பதே அதில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம். இதை பின்பற்றுவதால் தான் விளையாட்டில் இத்தகைய நிலையை எட்டியிருக்கிறேன். திருமண வாழ்க்கையால் எனது விளையாட்டுத்திறன் பாதிக்கப்படவில்லை. முன்பு எப்போதும் போலவே இருக்கிறேன். வெளிநாட்டில், திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொண்ட பல மல்யுத்த வீராங்கனைகள் இன்னும் பதக்கங்கள் வென்று கொண்டு தான் இருக்கிறார்கள்’ என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.