Breaking News
வெங்கட் பிரபுவின் அடுத்த படம் இதுதான்…

சென்னை 28’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், ‘சென்னை 28’ பார்ட் 2 கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. 2007ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 28’ படத்தின் தொடர்ச்சியாக இது வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகி விட்டார் வெங்கட் பிரபு. ஆனால் இயக்குநராக அல்ல, தயாரிப்பாளராக.

தன்னிடம் உதவியாளராக இருந்த சரவணராஜன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார் வெங்கட் பிரபு. இவர் ஏற்கெனவே ஜெய் – ஸ்வாதி நடிப்பில் ‘வடகறி’ படத்தை இயக்கியவர். படத்தின் புரமோஷனுக்காக, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் யார் என்பதை, தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை ட்விட்டரில் ஒரு வாரத்துக்கு அறிவிக்கப் போகிறாராம் வெங்கட் பிரபு.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.