Breaking News
கருணாநிதியின் வசனங்களை பேசிவிட்டால் ஒரு நடிகர் முழு தகுதி பெற்றவராகிறார்: கமல்ஹாசன் புகழாரம்

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமல் ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:

*கருணாநிதியின் வசனம் என்பது திரைத்துறையில் நுழைய அனுமதிச்சீட்டு போன்றது. மூத்த அரசியல்வாதி மட்டும் அல்ல, அற்புதமான கதாசிரியர் கருணாநிதி.திமுக தலைவர் கருணாநிதி உடனான உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது. தசாவதாரத்தின் போது கருணாநிதி கையால் கிள்ளப்பட்ட கன்னம் என் கன்னம்

* எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்களில் ஒருவர் கருணாநிதி. வைரவிழா கொண்டாடுவதற்கு எவ்வளவு இளமையில் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. மனம் இருந்தால் போதும். கருணாநிதியை தமிழ் ஆசான் என்று கூறியதற்கு எம்.ஜி.ஆரும் போனில் அழைத்து பாராட்டினார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.