Breaking News
ஆதார் அட்டை கொண்டு பண பரிவர்த்தனை செய்வதால் 4 நன்மைகள் உண்டு..!

ஆதார் அட்டை கொண்டு பண பரிவர்த்தனை செய்வதால் 4 நன்மைகள் உண்டு..!

ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை எப்படிச் செய்யப்படுகின்றது அதில் உள்ள நன்மைகள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம். ஒரு சில நாட்களாக ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம் என்று செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை எப்படிச் செய்யப்படுகின்றது அதில் உள்ள நன்மைகள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம். ஆதார் அட்டை பண பரிவத்தனைக்கு முதலில் என்ன செய்ய வேண்டும்? ஒருவர் ஆதார் அட்டை உதவியுடன் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் தனது வங்கி கணக்கில் ஆதார் எண்ணை முதலில் இணைக்க வேண்டும். டெப்பாசிட், பணம் எடுத்தல் மற்றும் பணம் அனுப்புதல் ஏதேனும் ஒரு வங்கி தொடர்பாளரின் உதவியுடன் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் எவ்வளவு என்று அறிந்துகொள்ளலாம், டெப்பசிட் செய்யலாம், பணத்தை எடுக்கலாம் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பலாம் மற்றும் பெறலாம். பண பரிவர்த்தனைக்கு கைவிரல் ரேகை போதும் ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்ய உங்கள் ஆதார் எண் மற்றும் கைவிரல் ரேகை இரண்டையும் உள்ளிட்டால் போதும் எளிதாகப் பரிவர்த்தனை செய்ய இயலும். கிராமப்புற மக்களுக்காக ஆதார் அட்டை மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறை அறிமுகப்படுத்த முக்கிய காரணம் வங்கியின் மைக்ரோ ஏடிஎம் சேவை மூலம் கிராம மக்கள் நிதி பரிவத்தனையை செய்வதற்காகவே ஆகும். பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இணைந்து செயலாற்றும் தன்மை இந்தப் பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்துவதன் மூலம் வங்கிகளின் உதவியால் பண பரிவத்தனையின் போது பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இணைந்து செயலாற்றும் தன்மையைப் பெற இயலும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.