Breaking News
தொப்பையை குறைக்க உதவும் ஒரு முக்கிய பொருள் கொள்ளு!

கொள்ளுப் பருப்பின் மருத்துவ குணம்: கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளு என்பதால் அதனை கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.

குளிர்காலத்தி்ல் தான் அதிகம் சளிபிடிக்கும். அந்த காலக்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும்.

கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளுவை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியைபோட்டால் அருமையாக இருக்கும். இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.