Breaking News
அபுதாபி பள்ளிவாசலுக்கு இயேசுவின் தாய் பெயர்

அபுதாபியில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு ‛மேரி – இயேசுவின் தாய்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பல்வேறு மதங்களை வழிபடும் மக்களிடையே சமூக ஒற்றுமையையும், வலிமையையும் ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய அரபின் முடி இளவரசர் ஷேக் முகம்மது பின் ஷாயித் அல் -நாக்யனின் உத்தரவு படி அபுதாபியில் உள்ள பள்ளி வாசலின் பெயரை ‛மேரி – இயேசுவின் தாய்’ என மாற்றியுள்ளனர்.

மேலும் இது குறித்து அந்நாட்டில் மக்களிடையே சகிப்புதன்மையை ஏற்படுத்த நியமிக்கப்பட்ட அமைச்சர் ஷிக்கா லுப்னா கூறுகையில்: ‛‛புனிதமான மனிததன்மை மக்களிடையே சகிப்புதன்மையை ஏற்படுத்தும், மற்ற மதங்களை பின்பற்றுபவர்களையும் ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் மக்களுக்கு ஏற்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டே இளவரசர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அபுதாபியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மூத்த பாதிரியாரான தாம்ஸன் கூறுகையில் : ‛‛ எங்கள் இரு மதத்திலும் உள்ள ஒற்றுமையை பறை சாற்றும் விதமாக இந்த நடவடிக்கை இருப்பதால் நாங்கள் இதை வரவேற்கிறோம் ” என கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.