ரஜினியோடு அரசியல் பார்வைகள் குறித்து விவாதித்தேன்: கஸ்தூரி தகவல்

0

ரஜினியோடு அரசியல் பார்வைகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பு பெற்றேன் என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 5 மாவட்ட ரசிகர்களை சந்தித்து, அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினி. அப்போது தனது அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

இதற்கு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாரா சூழ்நிலையில் கூட உடனே முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர். போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது” என்று ட்வீட்டினார். இவருடைய ட்வீட்டிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்நிலையில்நேற்று (ஜூன் 15) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் கஸ்தூரி. பிறந்தநாளை முன்னிட்டு ரஜினியை சந்தித்துப் பேசினார்.

அவருடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறந்த பிறந்த நாள் ஆச்சரியம்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நேருக்கு நேர் சந்திப்பு. உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. அவரது அரசியல் பார்வைகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பு பெற்றேன். அனைத்தும் நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.