Breaking News
மெக்காவில் பயங்கரவாத தாக்குதல்; 11 பேர் காயம்

முஸ்லீம்களின் புனித ஸ்தலமான மெக்கா மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 11 பேர் காயமடைந்தனர். பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

தாக்குதல் முறியடிப்பு:

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில், பெரிய மசூதி முஸ்லிம்களின் புனித தலமாக விளங்குகிறது. ரம்ஜான் மாதம் என்பதால் அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் மெக்காவில் பயங்காவாத தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் உயிரிழப்பு ஏற்படாமல் முறியடிக்கப்பட்டதாக சவுதி போலீஸ் தெரிவித்துள்ளனர்.

11 பேர் காயம்:

தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் தடையை மீறி சென்றபோது குண்டுகளை அவன் வெடிக்க செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அவனை சுட்டுக் கொன்றனர். குண்டு வெடித்ததில் ஒரு கட்டடம் சரிந்து விழுந்துள்ளது. இதில் வெளிநாட்டினர் 6 பேரும் மற்றும் 5 பாதுகாவலர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை:

தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சவுதி போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டும்…

முஸ்லீம்களின் புனித மாதமான ரம்ஜானில், அவர்களின் புனித ஸ்தலத்தில் நடந்த இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்., அமைப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் மெக்கா, மெதினாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதில் மெதினாவில் நடந்த தாக்குதலில் 4 பேர் பலியாயினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.