Breaking News
‘அமைச்சர் ராஜு என் ஹீரோ’: நடிகை கஸ்தூரி கிண்டல்

தெர்மாகோல் புகழ் அமைச்சரே, என் விருப்பமான சூப்பர் ஹீரோ’ என, நடிகை கஸ்துாரி குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி, பிரபு, விஜய்காந்த் என, 1990ல், பிசியாக வலம் வந்தவர் நடிகை கஸ்துாரி. திருமணமாகி வெளிநாடு சென்றவர், மீண்டும் இந்தியா திரும்பி வந்து, சில படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாய்ப்பு குறைவாக இருப்பதால், ‘டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில், எப்போதும் ‘பிசி’யாக இருக்கிறார்.

சமீபகாலமாக, அரசியல் உள்ளிட்ட சமூக பிரச்னைகளில் கருத்துக்கூறி, சிக்கலில் மாட்டுவதோடு, மற்றவர்களையும் மாட்டி விடுகிறார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, இவர் போட்ட டுவிட்டர் பதிவு, ரஜினி ரசிகர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பின், தன் பிறந்த நாளில் ரஜினியை சந்தித்து பேச, அவரது ரசிகர்கள் அமைதியாகினர்.

அதேபோல, முன்னாள் மத்திய அமைச்சர், டி.ஆர்.பாலுவுக்கும், தனக்கும் தொடர்பு இருப்பதாக கூறியவர், ‘இருவரது பிறந்த நாளும், ஒன்றே’ எனக்கூறி, காமெடி செய்தார்.

தற்போது, ‘என் விருப்பமான சூப்பர் ஹீரோ, அமைச்சர் செல்லுார் ராஜு’ என, தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர், ‘நிறைய பேர், தமிழகத்தில் என் விருப்பமான நாயகன் யார் என, கேட்கின்றனர். ‘அவர்கள் கீழே உள்ள படத்தை பார்க்கவும்’ எனக்கூறி, பதிவின் கீழ், தெர்மாகோல் புகழ் அமைச்சர், செல்லுார் ராஜுவின் படத்தை போட்டு, ‘சூப்பர் ஹீரோ’ என, குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த சிலர், ‘செல்லுார் ராஜுவை தமிழகத்திற்குள் மட்டும் சுருக்கிட வேண்டாம்; அவர் உலக மகா நாயகன்’ என்றும், ‘உங்கள் சூப்பர் ஹீரோ பட்டியலில், அ.தி.மு.க., பேச்சாளர் சம்பத்திற்கு இடம் இல்லையா’ என்றும், கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.