சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினருடன் மோதல் துருக்கி படை வீரர்கள் 14 பேர் பலி
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். அமைப்பினரின் கொட்டத்தை அடக்கும் பணியில் அண்டை நாடான துருக்கியின் படைகளும் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள அல் பாப் (இது துருக்கி எல்லையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது) நகரில், நேற்று முன்தினம் அந்த அமைப்பினருக்கும் துருக்கி படையினருக்கும் கடுமையான மோதல்கள் வெடித்தன.
இந்த மோதல்களின் முடிவில் துருக்கி படை வீரர்கள் 14 பேர் பலியாகினர். 33 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையில் துருக்கி ஒரே நாளில் சந்தித்த மிகப்பெரிய இழப்பாக இது கருதப்படுகிறது.