தமிழகத்தில் உயர்ந்து வரும் அரிசி விலை
தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்து வானம் பார்த்த பூமியாம் காட்சி அளிக்கும் நிலையில், காவிரி தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி முற்றிலும் முடங்கிபோய் உள்ளது. முக்கியமாக ஆண்டு தோறும் தமிழகத்தில் அதிக நெல் உற்பத்தியாகும் டெல்டா மாவட்டங்களில், விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால், நடப்பாண்டில் அரிசியின் விலை உயர்ந்து வருகிறது. மேலும், நெல் மகசூல் இல்லாமல் பெரும்பாலான நெல் அரவை ஆலைகள் மூடியே இருப்பதால், தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் ஒரு கிலோ அரிசி விலை தற்போது 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதே போன்று 25 கிலோ எடை அரிசியை கொண்ட சிறிய அரிசி மூட்டையின் விலை 50 – 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.
நன்றி : விகடன்