27 லட்சம் மதிப்புள்ள பைக் : சமந்தாவின் காதல் பரிசு
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வருகிறார்கள். இவர்கள் காதலுக்கு இரண்டு குடும்பமும் சம்மதித்து விட்டதால் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து திருமணம் நடக்கிறது.இந்த நிலையில் இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை இன்னும் வலுவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் அன்பு பரிசுகளை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் சமந்தா தன் காதல் பரிசாக 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் ஒன்றை நாக சைதன்யாவுக்கு பரிசளித்துள்ளார். நாக சைதன்யா பைக் ஆர்வலர் என்பதால் இந்த பரிசை அவருக்கு வழங்கி உள்ளார். காதலி வழங்கிய பைக்கை தானே ஓட்டிச் சென்று ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். அதற்கு வரி மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.
நன்றி : தினமலர்