புது மனைவியை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்தவர் கைது: ஹைதராபாத் போலீஸார் நடவடிக்கை
ஹைதராபாத்தில் புது மனைவியை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர். மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதத்தில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறை நடை முறையில் உள்ளது. இதனை தற்போது இஸ்லாமிய பெண்களே எதிர்த்து வருகின்றனர். அவர் களுக்கு மத்திய அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றத்திலும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசமைப்பு சட்ட அமர்வு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத் தில் வசித்து வரும் முஸ்லிம் ஒருவர் தனது புதுமனைவியை தலாக் கூறி விவாகரத்து செய் துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி கணவருக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கணவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் அவ்வப் போது கிண்டல் செய்ததால் மனைவியை விவாகரத்து செய்ததாக அவர் கூறியுள்ளார். தபால் அட்டை மூலம் 3 முறை தலாக் எழுதி அவர் அனுப்பிய தாகவும் தெரிவித்துள்ளார். 3 மாதங்களுக்கு முன்னர் தான் இருவருக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.