காஷ்மீரில் சி.ஆர்.பி.எப்., வீரரை சூழ்ந்து தாக்கும் கும்பல்
ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப்., வீரர் ஒருவரை கும்பல் ஒன்று, சூழ்ந்து கொண்டு விரட்டி தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாக்குதல்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிக்கு கடந்த 9ம் தேதி(ஏப்.,9) இடைத்தேர்தல் நடைபெற்றது. புத்கம் மாவட்டத்திலுள்ள ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த சி.ஆர்.பி.எப்., வீரர், ஓட்டுப்பதிவு முடிந்ததும் அங்கிருந்து வெளியேறினார். அப்போது ஒரு கும்பல் அவரை சூழ்ந்து சரமாரியாக அடித்து உதைத்தது.
துப்பாக்கி இருந்த போதும்…
கையில் துப்பாக்கி வைத்திருந்த போதும், தன்னைத் தாக்கிய கும்பல் மீது அவர் எந்த வித பதில் தாக்குதலும் நடத்தவில்லை. அந்த கும்பல் சி,ஆர்,பி,எப்,, வீரரை தலையில் தாக்கியதுடன், காலால் உதைத்த போது அவரது தொப்பி தனியாக கழன்று ஓடியது அப்பொழுதும் அவர் அமைதியாகவே நடந்து சென்றார். இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு:
தாக்குதலுக்கு ஆளான வீரர் பின்னர் தெரிவிக்கையில், தன்னிடம் இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தைப் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே, அப்போது தனது நோக்கமாக இருந்தது என்று தெரிவித்தார்.