அணு ஆயுத சோதனை நடத்துவோம் வடகொரியா மீண்டும் எச்சரிக்கை
வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து, அமெரிக்கா அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து கொரிய தீபகற்ப பகுதியில் யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற போர்க்கப்பலை நிறுத்தியது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு பதிலடி அளிக்கும் வகையில், அதிக திறன் கொண்ட அணுஆயுத ஏவுகணை சோதனையை எந்த நேரத்திலும் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவுக்கு, வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாவது: அமெரிக்கா எடுக்கும் எந்தவித நடவடிக்கைக்கும், பதிலடி கொடுக்க வடகொரியா தயாராகவே இருக்கிறது. எந்நேரத்திலும் அதிக திறன் வேகம் கொண்ட அணுஆயுத ஏவுகணை சோதனையை நாங்கள் நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.