பஞ்சாபி ஃபிஷ் கறி
என்னென்ன தேவை?
வவ்வால் மீன் – 1 கிலோ,
தக்காளி – 1/2 கிலோ,
நறுக்கிய வெங்காயம் – 1,
நசுக்கிய பூண்டு – 6 பல்,
பச்சைமிளகாய் – 4,
காய்ந்தமிளகாய் – 4,
தனியா – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
நெய் – 5 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மீனை கழுவி சுத்தம் செய்யவும். தக்காளியை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். மிக்சியில் தனியா, பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய், சீரகம் அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி, வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி பொன்னிறமாக மாறியதும், அதில் அரைத்த மசாலா மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா கலவையின் மேல் மீன் துண்டுகளை வைத்து உப்பு சேர்த்து நன்கு மூடி, சிம்மில் வைத்து வேக விடவும். மீன் வெந்ததும் அதன் மேல் கரம்மசாலாத்தூள்,கொத்தமல்லித்தழையை தூவி சாதத்துடன் பரிமாறவும். கிரேவி யாக வேண்டுமென்றால், மீன் சேர்க்கும் போது சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.