பிரெஞ்ச் ஃபிரைஸ் நல்லதா?
நடை, ஓட்டம், நீந்துதல் போன்ற ஏரோபிக் பயிற்சிகளால் மூளையில் என்ன மாற்றம் ஏற்படுகிறது?
ஏரோபிக் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதால் மூளையில் நியூரான்கள் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன. அத்துடன் புதிய மூளை செல்கள் பிறக்கவும் வழிவகுக்கின்றன. இதற்கு ‘நியூரோஜெனிசிஸ்’ என்று பெயர். எனவே, ஏரோபிக் பயிற்சிகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செய்வது உடலுக்கு நல்லது.
குழந்தைகளிடம் பிரபலமாக இருக்கும் ‘பிரெஞ்ச் ஃபிரைஸ்’ ஆரோக்கியத்துக்கு உகந்ததா?
பரவலாக நம்பப்படுவதற்கு மாறாக, உருளைக்கிழங்கை உண்பதால் உடலுக்குப் பெரும் பாதகங்கள் ஒன்றும் இல்லை. ஆனால் அதேநேரம், பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு உயிருக்கே பாதகம் விளைவிக்கும். உணவை எண்ணெயில் அதிக நேரம் பொரிய விடும்போது தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருளான அக்ரிலமைட் உருவாகிறது. இந்த வேதிக்கலவை நியூரோடாக்சிக் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அதனால் பிரெஞ்ச் ஃபிரைஸ் உள்ளிட்ட எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்ட உணவைத் தவிர்ப்பதே நல்லது.