நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு: தேர்தல் வரும் சமயம் மட்டுமே இந்தியாவில் நல்லது நடக்குமா?
விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், சேனிட்டரி நாப்கினுக்கு மத்திய அரசு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
“தேர்தல் வருவதால் நாப்கின்கள் மீதான வரி விலக்கிக் கொள்ளப்பட்டது என்ற குற்றச்சாட்டு உண்மையா?
செயற்பாட்டாளர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியா?,” என #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
“எல்லா மக்களிடமும் திறன் இருக்காது என்பதால் இந்தியா போன்ற தேசத்தில் நேப்கின்களுக்கு வரி இருக்கக்கூடாது” என்று கூறுகிறார் குணரத்னராஜா திலீபன்.
“எல்லா ஆளும் அரசும் செய்வது தானே கடைசி ஒரு வருஷம் தான் மக்களின் நலம் பற்றி இவர் கண்களுக்கு தெரியும் அதுவரை மக்கள் யாரோ அரசு யாரோ,” என்கிறார் ராஜ்குமார் ராஜலக்ஷ்மி எனும் ஃபேஸ்புக் பதிவர்.