என்னை பதவிநீக்கம் செய்தால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும்
என்னை பதவி நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் என அதிபர் டெனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, ஆபாச பட நடிகை உள்பட 2 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் கூறினர். அப்போது டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேன் கோஹன் பணம் கொடுத்து பிரச்னையை சுமூகமாக முடித்தாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோஹன் டிரம்ப் கூறியதால் பணம் கொடுத்ததாகவும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாவும் கூறப்படுகிறது.இந்த விவகாரத்தால் டிரம்ப் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர்பாக பேட்டியளித்த டிரம்ப், தன்னை பதவியிலிருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும், அமெரிக்கவாசிகள் பரம ஏழையாகவிடுவர். நான் நடிகைகளுக்கு பணம் கொடுத்ததற்கும் தேர்தலுக்கு தொடர்பில்லை. என்றார்.