அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு மாறுவதாக வெளியான தகவல் தவறானது: எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்
தந்து இணை செயலாளர் பதவியிலிருந்து 2 நாட்களுக்கு முன்னதாக விலகிய தோப்பு வெங்கடாசலம் திடீரென இன்று பெருந்துறையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அம்மா கழக பேரவை இணை செயலாளர் பதவியை தொடர்வதற்கு என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் சொந்த சூழ்நிலை காரணமாக இந்த பொறுப்பிலிருந்து விலகி கொள்வதாக கடிதம் ஒன்றை முதல்வரிடம் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். மேலும் அதிமுகவில் ஒரு உறுப்பினராகவும், தொண்டனாகவும் இருப்பேன் என்று கூறியிருந்த நிலையில், நேற்று தான் அதிமுக கட்சியை விட்டு விலகப்போவதாகவும் வேறு இயக்கத்தில் இணைய போவதாகவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால் இந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தான் அதிமுக-விலேயே தனது பணியை தொடர்வதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம். இவர் ஏற்கெனவே சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்ததோடு ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்து வந்தார்.
கடந்த 2016-ல் மீண்டும் எம்.எல்.ஏ.வான பிறகு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. புறநகர் மாவட்ட செயலாளர் பதவியும் மாற்றப்பட்டு, தற்போதைய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணனுக்கு வழங்கப்பட்டது. இதனால் தோப்பு வெங்கடாசலத்திற்கு பல்வேறு நெருடிக்கள் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, தோப்பு வெங்கடாசலத்துக்கு மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தான் வகித்த அம்மா பேரவை இணைச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் அவர் அமமுக-வில் இணைய போவதாக தகவல்கள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், தான் வேறு எந்த இயக்கத்திலும் இணைய போவதில்லை என்றும், அதிமுகவில் ஒரு உறுப்பினராக தனது பணியை தொடர்வதாகவும் தெரிவித்தார். சொந்த காரணங்களால் தாம் இணை செயலாளர் பதவியிலிருந்து விலகியதாக அவர் தெரிவித்தார்.