Breaking News
பொண்ணுங்களுக்கு தீட்டா..”எந்த கடவுள் சொல்லுச்சு..’ ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி கேள்வி

சென்னை,

தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தனியார் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தார். அதன்பிறகு தான் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அட்டகத்தியில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்த இவர் ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்தார். இவருடைய தந்தை தெலுங்கு திரைப்படங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து கதாநாயகி ஆனவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர்.

இந்தநிலையில், தி கிரேட் இந்தியன் கிச்சன் படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:- பொண்ணுங்களுக்குனா தீட்டா..”எந்த கடவுள் சொல்லுச்சு. கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால் சொல்லுங்கள். எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது.

இது சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லேமே மனிதர்கள் உருவாக்கியது. நான் இது போன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை. இப்பொழுது கூட ஆணாதிக்கம் இருக்கிறது.ஆணாதிக்கம் என்பது கிராமத்து பக்கம் நிறைய இருக்கின்றது என்பது எனது கருத்து. சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாதது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.