Breaking News

 

கிறிஸ்துவர்களின் முக்கிய திருநாளான ஈஸ்டர் பண்டிகை வரும் 09-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாட தயாராகி வருகின்றனர்‌. இதற்காக கடந்த 40 நாட்களாக தவ காலத்தில் இருந்தும் வருகின்றனர். தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான புனித வியாழனை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள தூய வளனார் தேவாலயத்தில் பாதம் கழுவும் புனித நிகழ்ச்சி திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகளும் திருப்பலிகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பெருமான் சீடர்களுக்கு தெரிவித்தது போல குருவும் ஆசிரியரான நான் தங்கள் பாதங்களை கழுவது போல் தாங்களும் இறைமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை நினைவுப்படுத்தும் வகையில் இறைமக்களின் பிரதிநிதிகள் 12 பேருக்கு பாதங்களை கழுவினார். அதனை தொடர்ந்து நற்கருணை இடம் மாற்றம் நிகழ்வும் நடைபெறுகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.