தூத்துக்குடியில் ஓசி சிப்ஸ் கேட்டுக் கொடுக்காததால் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு

தூத்துக்குடியில் ஓசி சிப்ஸ் கேட்டுக் கொடுக்காததால் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு

கடந்த 10.03.2024 அன்று தூத்துக்குடி வ.உ.சி மார்கெட் வி.இ.சாலையில் உள்ள ஒரு தனியார் சிப்ஸ் கடையில் தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த தாமஸ் மகன் பிரவீன் குமார் (35), தாளமுத்துநகர், ஆனந்த் நகரை சேர்ந்த கொர்ணாலிஸ் மகன் சதீஷ்குமார் (34) மற்றும் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த சேவியர் மகன் கரண்தாஸ் (31) ஆகியோர் மதுபோதையில் இலவசமாக சிப்ஸ் தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு அந்தக் கடையில் வேலை பார்த்துவரும் தூத்துக்குடி பழையகாயல் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் குமரன் (19) என்பவர் தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் சதீஷ்குமார் மற்றும் கரண்தாஸ் ஆகிய மூவரும் சேர்ந்து கடையின் ஊழியரான குமரனிடம் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து குமரன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து
பிரவீன்குமார், சதீஷ்குமார் மற்றும் கரண்தாஸ் ஆகிய 3 பேரையும் உடனடியாக கைது செய்து சிறையிலடைத்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )