
புதிதாக வாங்கிய மொபைல் பழுது – பாதிக்கப்பட்டவருக்கு 29,500 ரூபாய் மொபைல் விற்பனையாளர் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி ரத்தினாபுரத்தைச் சார்ந்த டைட்டஸ் ரோஷன் என்பவர் தூத்துக்குடி விநாயகர் கோயில் தெருவிலுள்ள மொபைல் விற்பனையாளரிடம் மொபைல் பால வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே மொபைல் பழுதடைந்து விட்டது. இதை சரி செய்து தர சர்வீஸ் சென்டரில் கொடுத்துள்ளார். அவர்கள் அதைப் பார்த்து விட்டு கடைக்காரர் கொடுத்த IMEI எண்ணும் மொபைலில் உள்ள IMEI எண்ணும் மாறுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு மாதம் கழித்து மொபைல் ரிப்பேர் செய்யப்பட்டு விட்டது எனக் கொடுத்துள்ளார்கள். ஆனால் அது மறுபடியும் சரியாக செயல்படவில்லை.
மொபைலின் மாறியிருப்பதாலும் வழக்கறிஞர் மூலம் உற்பத்திலேயே குறைபாடு உள்ளதாலும், IMEI எண் மன உளைச்சலுக்கு ஆளான டைட்டஸ் ரோஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பின்னர் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பழுதான மொபைலுக்கு செலுத்தப்பட்ட தொகை ரூபாய் 9,500, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 29,500 ஐ இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.