ஓ.பி.எஸ்., பின்னணியில் தி.மு.க., : சசிகலா குற்றச்சாட்டு
‛பன்னீர் செல்வத்தின் பின்னணியில் தி.மு.க., இருக்கிறது. அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்’. என சசிகலா தெரிவித்தார்.
இதுகுறித்து, சசிகலா போயஸ் தோட்டத்தில் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,வில் எந்த பிரச்னையும் இல்லை. எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள்.
ஓ.பி.எஸ்., பின்னணியில் தி.மு.க.,
பன்னீர்செல்வத்துடன் சுமூகமான உறவு இருந்தது.பன்னீர் செல்வத்தின் பின்னால் தி.மு.க., இருக்கிறது. காரணம், சட்டசபை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும், முதல்வர் பன்னீர் செல்வமும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து பேசியதிலிருந்தே இதை,தெரிந்து கொள்ளலாம்.
அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து பன்னீர் செல்வம் நீக்கப்படுவார். ராஜினாமா செய்ய கோரி பன்னீர் செல்வத்தை ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை.
இவ்வாறு சசிகலா தெரிவித்தார்.
முதல் பேட்டி
அ.தி.மு.க., பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்ற பின் முதன்முதலாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையி்ல் நள்ளிரவு 1.15 மணிக்கு சசிகலா பத்திரிகையாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்