ஜெ., பாணியில் பன்னீர் அதிரடி
சசிகலா குடும்பத்திடம் சிக்கியுள்ள, அ.தி.மு.க.,வை மீட்க, பன்னீர்செல்வம் ஜெயலலிதா பாணியில் அதிரடி நடவடிக்கையை துவக்கி உள்ளார்
சட்டசபைக்குள்…
அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., மறைந்தபோது, அ.தி.மு.க., ஜானகி அணி, ஜெயலலிதா அணி என, இரண்டாக பிளவுபட்டது. பின், 1989ல் நடந்த, சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. ஜானகி தலைமையிலான, அ.தி.மு.க., ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஜெ., தலைமையிலான, அ.தி.மு.க., 27 இடங்களை பிடித்தது. சட்டசபைக்குள் நுழையும் போதே, எதிர்க்கட்சி தலைவராக, ஜெயலலிதா சென்றார்.
ஜெ., பாணியில்..
சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் தாக்குதலுக்கு ஆளாகி, ‘இனி முதல்வராகத் தான் சபைக்குள் நுழைவேன்’ என, சூளுரைத்தார். அதன்படியே, 1991 தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று, முதல்வராக சபைக்குள் நுழைந்தார். ஜெ., விசுவாசியான பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்திடம் சிக்கியுள்ள, அ.தி.மு.க.,வை மீட்க, அவரது பாணியில் அதிரடி நடவடிக்கையை துவக்கி உள்ளார். தன் முதல் நடவடிக்கையை, ஜெ., நினைவிடத்தில், அவரை வணங்கி, துவங்கி உள்ளார்.
நன்றி : தினமலர்