உத்தரபிரதேச சட்டசபை 4-ம் கட்ட தேர்தல்; மாயாவதி வாக்களித்தார்
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் 4-ம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள முனிசிபல் நர்சரி பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அளித்த கூறியதாவது, “சமாஜ்வாதி கட்சியில் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக இல்லை. முஸ்லிம்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிப்பது மாபியாக்களுக்கு வாக்களிப்பது போன்றது என்பதை வாக்களிப்பதற்கு முன்பே உ.பி மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால் உ.பி மக்கள் சமாஜ்வாதி கட்சியை நிராகரித்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் கலவரம் நடந்தது. தாங்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பது சமாஜ்வாதி கட்சி தலைவர்களின் முகத்தில் தெரிகிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.