Breaking News
உக்ரைனில் கீவ் நகரில் இந்திய மாணவர் மீது துப்பாக்கிச்சூடு?
கீவ்,
ரஷியாவின் படையெடுப்பால் சின்னாபின்னமாகி வரும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு அசுர வேகத்தில் மீட்டு வருகிறது. ‘ஆபரேஷன் கங்கா’ என்ற இந்த திட்டத்தில் தனியார் விமானங்களுடன், விமானப்படை விமானங்களும் களத்தில் இறக்கப்பட்டு உள்ளன.
உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டு உள்ளதால் ஹங்கேரி, போலந்து, ருமேனியா போன்ற அண்டை நாடுகளுக்கு இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்தவாறே இந்த மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 4 மத்திய மந்திரிகளும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். அந்தவகையில் ஹர்தீப் சிங் புரி ஹங்கேரிக்கும், ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவுக்கும், கிரண் ரெஜிஜூ சுலோவாகியாவுக்கும், வி.கே.சிங் போலந்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில், உக்ரைன் லிவிங் நகரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் உடனடியாக  அவர்  ஆம்புலன்ஸ் மூலம் கீவ் நகர மருத்துவமனையில் அனுமதித்ததாக இளைஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இருந்து வந்த மாணவர் சுடப்பட்டதால் பாதியிலேயே திரும்ப அழைத்து செல்லப்பட்டதாக தகவல்  வந்துள்ளதாக  மத்திய மந்திரி வி.கே.சிங்  கூறியுள்ளார்.  குறைந்த பாதிப்புடன் இந்தியர்களை அழைத்துவர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக  மத்திய மந்திரி வி.கே.சிங் கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.