நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஹோலி வாழ்த்து
புதுடெல்லி,
வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக வட இந்தியாவில் இந்து மதத்தினர் கொண்டாடும் பண்டிகை ஹோலி.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையன்று தங்களது துன்பங்கள் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என மக்கள் நம்புகின்றனர்.
இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை வட இந்தியாவில் இன்று (மார்ச் 18) கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து தரப்பினர் மீதும் வண்ணப்பொடிகளை தூவி, ஒருவருக்கு ஒருவர் ஹோலி வாழ்த்துகளையும், தங்கள் மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பரஸ்பர அன்பு, சகோதரத்துவம் மற்றும் அனைத்து வண்ணத்திலான மகிழ்ச்சியையும் உங்கள் வாழ்வில் கொண்டுவரும்’ என தெரிவித்துள்ளார்.