Breaking News
ரூ.450 கோடி மதிப்பில் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் பூங்கா

ஸ்ரீபெரும்புதுார் : ஒரகடம் சிப்காட்டில் 450 கோடி ரூபாயில் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் பூங்கா அமைவதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ளன. இதனால் வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்கும் என, இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

latest tamil news

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து இடங்களில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளன.

நிதியுதவி

இங்கு, 1,200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரகடம் சிப்காட்டில் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.இந்த மருத்துவ பூங்காவில், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதியுதவி வேண்டி, மத்திய அரசின் மருந்தியல் துறைக்கு தமிழக அரசு சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து ஒரகடம் சிப்காட்டின் இரண்டாவது அலகில் உள்ள வைப்பூர் மற்றும் எறையூர் ஊராட்சி பகுதியில் சுமார் 350 ஏக்கர் பரப்பில் மருத்துவ பூங்கா அமைய இடம் தேர்வு செய்யப்பட்டது.அறிக்கைஇங்கு, 450 கோடி ரூபாய் மதிப்பில், அடிப்படைக் கட்டமைப்புகள், ஆய்வுக் கூடங்கள், முன்னோடி மாதிரி மையம், திறன் மேம்பாட்டு மையம் முதலியவற்றை உள்ளடக்கி, ஒரே இடத்தில் பல்வேறு வசதிகள் கொண்ட பூங்காவாக அமையும் என, முதல்வர் ஸ்டாலின் கடந்த நவம்பரில் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், ஒரகடம் மருத்துவ சாதன உற்பத்தி பூங்கா அமைய உள்ள இடத்தில் சாலை, வடிகால்வாய், உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பூங்கா அமைந்தால் 10 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

latest tamil news

இதனால், இளைஞர்கள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இடம் இல்லைகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ‘சிப்காட்’ தொழிற் பூங்கா அமைந்துள்ளது.’சிப்காட்’ பூங்கா அமைப்பதற்காக அருகே உள்ள ஊராட்சிகளில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அருகே அமைந்துள்ள ஊராட்சிகளில் அரசு காலி நிலம் ஏதும் இல்லாமல் போனது. நடவடிக்கைஇதனால் ஊராட்சியில் சமுதாய கூடம், அங்கன்வாடி கட்டடம், தரம் உயர்ந்த பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடம் என அரசு கட்டடம் கட்டுவதற்குகூட, இடம் இல்லாமல் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் சைலேந்திரனிடம் கேட்டபோது, ” சிப்காட் அமைந்துள்ள ஊராட்சிகளில் அரசு கட்டடம் கட்டுவதற்கு இடமில்லை என எந்த புகாரும் வந்ததில்லை. புகார் வந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.என்னென்ன மருத்துவ உபகரணங்கள்ஒரகடம் மருத்துவ சாதன உற்பத்தி பூங்காவில், அறுவை சிகிச்சை உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள், பி.பி. திரைகள், பேஸ்மேக்கர்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பூங்கா அமைய உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.